தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு மூக்கணாங் கயிறு போல செயல்படுகிறார். அவர் இல்லை என்றால் திமுகவின் அராஜகம் அதிகரித்து விடும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது குருபூஜை மற்றும் 60வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் திமுக ஆட்சி மக்களால் வீட்டுக்கு அனுப்பப்படும். 2017ஆம் ஆண்டு இபிஎஸ், ஓபிஎஸ்ஸை யார் இணைத்து வைத்தார்களோ, அவர் மனது வைத்தால் தான் அதிமுக ஒன்றிணையும்.
அதிமுக என்பது வேறு ஒரு கட்சி. அது பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. இது விடியல் ஆட்சியில்லை. அதை முதல்வரே கண்டு பயப்படும் அளவிற்கான ஆட்சியாக இருக்கிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு மூக்கணாங் கயிறு போல செயல்படுகிறார். அவர் இல்லை என்றால் திமுகவின் அராஜகம் அதிகரித்து விடும். பாஜகவிற்கு ஆதரவாக நான் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சியில் தீவிரவாதம் அதிகரித்து உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 1991ஆம் ஆண்டு ஜனவரியின் நிலை மீண்டும் உருவாகும்” என்றார்.