முக்கியச் செய்திகள் இந்தியா

‘ஆளுநருக்கு அதிகாரமில்லை’ – திமுக எம்பி வில்சன்

நீட் விலக்கு மசோதாவை, நிராகரித்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய தீர்மானத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில், திமுக வழக்கறிஞர் வில்சன் நியூஸ் 7 தமிழுக்கு கொடுத்த பேட்டியில்,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“தமிழக சட்டமன்றத்தில் நீர் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட 6 மாதங்கள் தீர்மானத்தை குடியரசுத்தலைவருக்கு கூட அனுப்பாமல் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், தற்போது அதை நிராகரித்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவும், சட்டப்படி குடியரசுத்தலைவருக்கு தீர்மானத்தை அனுப்பி வைப்பது மட்டுமே அவருக்கான அதிகாரம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைச் செய்தி: முதலமைச்சர் தனது திறமையின்மையை மறைக்கப் பார்க்கிறாரா? – இபிஎஸ் விமர்சனம்

மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆளுநர் மேற்கோள் காட்டியிருந்தால் அது தவறு எனவும், ஆளுநர் ஏ.கே.ராஜன் கமிட்டி அளித்த அறிக்கையை அவர் படித்தாரா என்று தெரியவில்லை. அதை படித்தாலே நீட் தேர்வின் பாதகம் புரியும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு மசோதாவில், ஆளுநர் வேண்டுமென்றே செயல்படுகிறார்” என்று திமுக வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல் : பெங்களூரு அணி அசத்தலான வெற்றி!

Halley Karthik

ஹிஜாப் அணிய தடை; ஆங்காங்கே வெடித்த போராட்டங்கள்

G SaravanaKumar

16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Vandhana