முக்கியச் செய்திகள் தமிழகம்

விமர்சனங்களுக்கு அரசு செவிசாய்ப்பது வரவேற்கத்தக்கது – ஜி.ராமகிருஷ்ணன்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியாகும் விமர்சனங்களுக்கு செவிசாய்த்து, முடிவுகளை மாற்றியமைப்பது வரவேற்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறையில் இருந்து வெளியிடப்படும் அவ்வப்போதைய அறிவிப்புகள் சர்ச்சை ஆகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்தில் மலழையர் பள்ளிகளில் சேர்க்கையை நிறுத்துவதென்ற முடிவை அரசு எடுத்தது. ஆனால் அது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பாதிக்கும் என்று விமர்சனங்கள் எழுந்த பிறகு, விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இப்போது அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளையின் சார்பில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அதிமுக அரசு கொடுத்திருந்த அனுமதியை அரசு நீட்டித்தது. இந்த முடிவின் மீது விமர்சனம் எழுந்ததும் உடனடியாக அனுமதியை அரசு ரத்து செய்துள்ளது. இதுபோல் விமர்சனங்களுக்கு செவிசாய்த்து, முடிவுகளை மாற்றியமைப்பது வரவேற்புக்குரிய நடவடிக்கை என பாராட்டு தெரிவித்தார்.

 

கற்றல் கற்பித்தல் பணிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தச் செய்வதே புதிய கல்விக் கொள்கை காட்டும் திசை வழியாகும்.ஆனால், தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை முன்னெடுக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு தெளிவாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கென தனியாக ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கிட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த குழுவின் அறிக்கையை வேகமாக பெற்று, அதன் படி பள்ளிக் கல்வித் துறையை செயல்படுத்துவது அவசியமாகும். அதுவே தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வி கட்டமைப்பை வலுப்படுத்திடும் என ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இறந்த நபரின் சடலத்தை மீட்ட பெண் காவலர்

Halley Karthik

காவிரியில் உபரிநீர் திறப்பு: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Gayathri Venkatesan

சென்னை மெட்ரோவில் 63 ஆயிரம் பேர் பயணம்!

Vandhana