63 நாணயங்களை விழுங்கிய நபர்-அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய அரசு மருத்துவர்கள்

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள மதுரதாஸ் மாத்தூர் மருத்துவமனையில் வயிற்றில் வலி என்று கூறி இளைஞர் ஒருவர் வந்தார். அவரை சோதித்த மருத்துவர்கள் எக்ஸ் ரே எடுத்து வரும்படி கூறினர். இதையடுத்து, எக்ஸ் ரே…

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள மதுரதாஸ் மாத்தூர் மருத்துவமனையில் வயிற்றில் வலி என்று கூறி இளைஞர் ஒருவர் வந்தார்.

அவரை சோதித்த மருத்துவர்கள் எக்ஸ் ரே எடுத்து வரும்படி கூறினர்.
இதையடுத்து, எக்ஸ் ரே ரிப்போர்ட்டில் பார்த்தபோது மெட்டல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்த இளைஞருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
அப்போது 63 நாணயங்களை எடுத்தனர். மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 1.5 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.

36 வயதுடைய அந்த இளைஞர் தற்போது நலமாக உள்ளார் என்று மருத்துவர்கள்  தெரிவித்தனர்.

இந்த அறுவை சிகிச்சை என்டோஸ்கோபி முறையில் செய்யப்பட்டது. குடல் இயக்கத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை செய்தனர்.

மறுபடியும் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது வயிற்றில் மேலும் நாணயங்கள் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. பெரும்பாலும் ஒரு ரூபாய் நாணயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.