முழுமையாக PINK நிறமாக மாறும் அரசுப் பேருந்துகள்

பெண்களுக்கான PINK பேருந்துகளில் முன்பக்கம் மட்டும் பெயிண்ட் அடித்து விமர்சனத்திற்குள்ளான அரசு மாநகர பேருந்துகளை முழுமையாக PINK நிறமாக  போக்குவரத்துக் கழகம் மாற்றியுள்ளது. பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில்…

பெண்களுக்கான PINK பேருந்துகளில் முன்பக்கம் மட்டும் பெயிண்ட் அடித்து விமர்சனத்திற்குள்ளான அரசு மாநகர பேருந்துகளை முழுமையாக PINK நிறமாக  போக்குவரத்துக் கழகம் மாற்றியுள்ளது.

பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில் பேருந்தில் முன்புறம் மட்டும் PINK நிற பெயிண்ட் அடிக்கப்பட்டன. இந்த PINK நிற பேருந்துகளின் சேவையை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் தொடங்கிவைத்தார். பேருந்தில் முன்புறம் மட்டும் PINK நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

இந்நிலையில், பெண்களுக்கான இலவசப் பேருந்து முழுவதையும் PINK நிறத்தில் மாற்றும் நடவடிக்கையை போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக மூன்று பேருந்துகள் முழுமையாக பிங்க் நிறமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள் அனைத்தும் 29 C Besent Nagar Route இல் சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் முழுமையாக பிங்க் நிறமாக மாற்றப்பட்டுள்ளதற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.