பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், தனது 23-ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறது. இதை அடுத்து சிறப்பு டூடுல் பக்கத்தை வெளியிட்டுள்ளது.
பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், கோடிக்கணக்கானவர்களின் செல்லப்பிள்ளை யாக இருக்கிறது. எதைப் பற்றிய தகவல் என்றாலும், தேடினால் கொட்டிக் கொடுக்கிறது இந்த தாராள தேடுபொறி. இந்த கூகுள், 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி நிறுவப் பட்டது என்றாலும் கூகுளின் தேடுதல் பக்கங்களின் எண்ணிக்கை, சாதனை அளவாக அதிகரித்ததை குறிக்கும் வகையில் செப்டம்பர் 27 ஆம் தேதியை, பிறந்த நாளாகக் கொண் டாடுகிறது.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற வைன் லாரி பேஜ், செர்கி பிரின் என்ற நண்பர்கள் உருவாக்கியதுதான் இந்த தேடுபொறி. நூலகத்தின் நூல்கள், ஆவணங்களை தேடுவதற்கு உருவாக்கப்பட்ட இந்த தேடுபொறி இன்று உலகில் முக்கிய மான ஒன்றாக வளர்த்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 23-ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுவதை அடுத்து, சிறப்பு டூடுல் பக்கத் தை கூகுள் வெளியிட்டுள்ளது.








