கூகுள் நிறுவன கட்டிடத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட ஊழியர்; காரணம் என்ன ?

கூகுள் நிறுவனத்தின் மூத்த ஊழியர் 14வது மாடி கட்டிடத்திலிருந்து ஊழியர் ஒருவர் குதித்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 31 வயதான மென்பொருள் பொறியாளர் செல்சியாவில் உள்ள கூகிளின் தலைமையகத்தின் கட்டிடத்திலிருந்து குதித்து இறந்தார். செல்சியாவில் உள்ள…

கூகுள் நிறுவனத்தின் மூத்த ஊழியர் 14வது மாடி கட்டிடத்திலிருந்து ஊழியர் ஒருவர் குதித்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

31 வயதான மென்பொருள் பொறியாளர் செல்சியாவில் உள்ள கூகிளின் தலைமையகத்தின் கட்டிடத்திலிருந்து குதித்து இறந்தார். செல்சியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் 14வது மாடி கட்டிடத்திலிருந்து ஊழியர் குதித்து உயிரிழந்ததாகச் செய்தி அறிக்கை கூறுகிறது.

அந்த நபரின் கடந்த பிப்ரவரி மாதம் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட பிறகு நடந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

14 வது மாடியின் திறந்தவெளி மொட்டை மாடியின் விளிம்பில் கைரேகைகளை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தற்கொலைக் குறிப்பு அல்லது வீடியோ எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.