#GoldRate | தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில்…

#GoldRate | This is the right time to buy gold... What is the price today?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நவம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. 

இதையும் படியுங்கள் : #BANvsWI | கடைசி ஒருநாள் போட்டி… வங்காளதேச அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்!

இந்த சூழலில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் (டிச.11) சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,280 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் நேற்று (டிச.12) விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,285-க்கும், ஒரு சவரன் ரூ.58,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தில் விலை இன்று (டிச.13) அதிரடியாக குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.