#GoldRate | தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில்…

#GoldRate | The price of gold which has continued to rise... What is the current price situation?

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நவம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த சூழலில், சென்னையில் நேற்று முன்தினம் (டிச.10) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.57,640 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : தன்னை பற்றி கிசுகிசு… நடிகை #SaiPallavi கண்டனம்!

அதேபோல், நேற்று (டிச.11) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,280 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,285-க்கும், ஒரு சவரன் ரூ.58,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.