#GoldRate | இன்று தங்கம் வாங்கலாமா… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில்…

#GoldRate | Can I buy gold today... What is the price today?

சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று (டிச.20) குறைந்துள்ளது. இன்றுடன் சேர்த்து கடந்த 3 நாட்களாக தங்கம் விலை குறைந்துள்ளது. அந்த வகையில், நேற்று முன்தினம் (டிச.18) தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல், நேற்று சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.7,040-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.