சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10,11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இதனிடையே தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து விற்பனையானது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்தது. இதனைத் தொடர்ந்து மாலையிலும் விலை மேலும் குறைந்தது. மாலையில் கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் என மொத்தம் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.330-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 640-ம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் தங்கம் ஒரு கிராம் ரூ.13,900-க்கும் சவரன் ரூ.1,11,200-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







