Gold Rate | இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72ஆயிரத்து 560-க்கும் விற்பனையாகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து சவரன் 72 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.9ஆயிரத்து 70-க்கும், ஒரு சவரன் ரூ.72ஆயிரத்து 560-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.