சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10,11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே தங்கம் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.14,780க்கும், ஒரு சவரன் ரூ.240 குறைந்து ரூ.1,18,240க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை
கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒருகிராம் ரூ.14,730-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. சென்னையில் வெள்ளி விலை கிராமிற்கு ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,95,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




