தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,185-க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,135-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,13,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




