GOLD RATE | தொடர்ந்து சரியும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10,11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

இதனிடையே தங்கம் விலை நேற்று முன்தினமும் தங்கம் கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,230-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து திடீர் திருப்பமாக நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,100-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 வரை குறைந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.