Gold Rate | தங்கம் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.97ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை குறைந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிவிலை இன்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து, ஒரு கிராம் ரூ.203-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.