Gold Rate | உச்சத்தை தொட்ட தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 அதிகரித்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த 17-ம் தேதி வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ. 97ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

இதனிடையே நெற்றி தங்கம் விலை ரூ.180 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 480-க்கும், சரவனுக்கு ரூ.1,440 அதிகரித்து சவரன் ரூ.91 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 700-க்கும், சவரனுக்கு ரூ.1,760 திகரித்து ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.170 க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.