GOLD RATE | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்படுகிறது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10-ம் தேதி கிராம் ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.250 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 850-க்கும், சவரனுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்து சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,950-க்கும், வரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.