தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது.
இதனிடையே நேற்று ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்ந்து முதல் முறையாக ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்தை கடந்து சவரன் ரூ.89 ஆயிரத்தை தொட்டு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.11,200-க்கும், சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.








