GOLD RATE | தங்கம் விலை சற்று குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை தொடர்ந்து 6-வது நாளாக மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2.50 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.