Gold Rate | மீண்டும்..மீண்டுமா … புதிய உச்சத்தில் தங்கம் விலை!

ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த சூழலில் தங்கம் விலை கடந்த 16ம் தேதி ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

இதனையடுத்து, தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,290-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்து320-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,360-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்து 880-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.148-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.