மூன்றாவது நாளாக குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிலவரமும் அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை கடந்த 22 ஆம் தேதி எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையானது. அதன் பின்னர் அடுத்த நாள் தங்கம் விலை சரிவை கண்டது.

அதன்படி  சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 840 ஆக விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.9ஆயிரத்து 230 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 240 க்கும் கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.9 ஆயிரத்து 155 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்றும்(ஜூன்.25) தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு
ரூ.680 குறைந்து ரூ.72 ஆயிரத்து 560-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.9 ஆயிரத்து 70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.