தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இதனிடையே தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.600 குறைந்து 1,08,120-க்கும், கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.13,515-க்கும் விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 13,535ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2.40 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.




