தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்திருந்த நிலையில், தற்போது ரூ.2200 உயர்ந்து ரூ.1,04,800-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.275 உயர்ந்து ரூ.13,100-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.285 உயர்ந்து ரூ.13,385-க்கும், சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ரூ.1,07,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.210-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.




