ரூ.55 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கங்கத்தின் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்துள்ளது. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. …

சென்னையில் ஆபரணத் தங்கங்கத்தின் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்துள்ளது.

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருவது வழக்கம்.

இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வந்தது.  குறுகிய கால இடைவெளியில் கிடுகிடுவென தங்கத்தின் விலை அதிகரித்து சவரன் ரூ.55,000-ஐ தாண்டியது.  இந்த தொடர் விலையேற்றம் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து தங்கம் விலை ஏறியும், இறங்கியும் காணப்பட்டது.

அந்த வகையில், நேற்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.54,640 -க்கும், கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.6,830 -க்கும்,விற்பனை செய்யப்பட்டது.  இந்த நிலையில், தங்கம் விலை இன்று ரூ.55 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.55,360-க்கும், கிராமுக்கு  ரூ.90 அதிகரித்து ரூ.6920 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து 100.50 -க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,00,500-க்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.