சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.7,160க்கும், சவரன் ரூ.57,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.7,095 க்கும், சவரன் ரூ.56,760 க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.103க்கு விற்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ரூ.7,140க்கு விற்பனையானது. சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து ரூ.57,120 விற்பனையானது.
இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.103க்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.







