தங்கம் விலை குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சென்னையில் நேற்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் நேற்று மாலை தங்கத்தின் விலையில் மீண்டும் சரிவு ஏற்பட்டது. மாலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. வாரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் தங்கம் விலை இருமுறை குறைந்தது.

இதனிடையே, இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,685-க்கும் சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும், இன்றும் சேர்த்து ஒரு சவரனுக்கு ரூ.1560 குறைந்துள்ளது.

தொடர்ந்து 11வது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

பண்டிகை நாட்கள் வரவிருக்கும் நிலையில் தங்கத்தின் விலை தொடந்து குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.