தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.470-ம் சவரனுக்கு ரூ.3760-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11,510 க்கும், ஒரு சவரன் ரூ.92,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 21) ஆபரணத் தங்கம் விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,465-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.91,720-க்கு விற்பனையாகிறது. கடந்த 12 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.14,320 குறைந்துள்ளது.
வெள்ளி விலையும் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்றைய விலையிலேயே வர்த்தகமாகிறது. அதன்படி, இன்று ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1.75 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




