முன்னாள் சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 16.37 லட்சம் ரூபாய், 1872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னான் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் 2020-ம் ஆண்டில் அமைச்சராக இருந்த போது வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்குவதற்கு அத்தியாவசிய சான்றினை முறைகேடாக வழங்கியது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பத்துறை, சென்னை நகரப்பிரிவு – 5 குந்த எண் 1/2022 சட்டப்பிரிவுகள் 120(B), 420, 468, 471 IPC & 7(a) of the Prevention of Corruption (Amendment) Act, 2018 -ன் கீழ் 12.09.2022 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இன்று 13.09.2022-இல் வழக்கு சம்பந்தமாக சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் தவா 1 இடத்திலும் ஆக மொத்தம் 13 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி சோதனையில் 16.37 லட்சம் ரூபாய், 1872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 வன் தட்டு, 1 பென்டிரைவ், 2 – ஐ போன்கள் மற்றும் 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் இவ்வழக்கின் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டன என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.