மாணவிகளுக்காக சிறை சென்றது மறக்க முடியாத நிகழ்வு- முதலமைச்சர்

இராணி மேரி கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்று அதற்காக சிறை சென்றது மறக்க முடியாத நிகழ்வு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கடந்த 1914ம் ஆண்டு தொடங்கப்பட்ட இராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு…

இராணி மேரி கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்று அதற்காக சிறை சென்றது மறக்க முடியாத நிகழ்வு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கடந்த 1914ம் ஆண்டு தொடங்கப்பட்ட இராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழா இன்று வெகுவிமரிசையாக நடைப்பெற்றது. இன்றைய பட்டமளிப்பு விழாவில் 2,702 மாணவிகள் இளங்கலை பட்டமும், 473 மாணவிகள் முதுநிலை பட்டமும், 84 மாணவிகள் ஆய்வியல் நிறைஞர் பட்டம்(எம்.பில்) என மொத்தம் 3,259 பேர் பட்டம் பெற்றனர்.

இதில் 5 மாற்றுத்திறனாளி மாணவியர் உட்பட 104 மாணவியர் சிறப்புத்தகுதி பெற்று பதக்கமும் பட்டயமும் பெற்றனர்.இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

https://twitter.com/mkstalin/status/1594926662231109634

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த கல்லூரிக்கு வந்ததுக்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வளவு அமைதியாக இருக்கும் இந்த கல்லூரி மாணவிகளை பார்க்கும் போது மிக அழகாக இருக்கிறது. நீங்கள் பெற்ற அறிவு உங்களை மேலும் மேலும் வளரவைக்கட்டும். கல்லூரிகளில் இருந்து நீங்கள் விடை பெறுகிறீர்கள். ஆனால் கற்பதில் இருந்து விடை பெறவில்லை என்று கூறினார்.

இந்தியாவில் முதல் முதலில் தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ஒன்று தான் இராணி மேரி கல்லூரி. தமிழகத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்ட மகளிர் கல்லூரி இதுவாகும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த இராணி மேரி கல்லூரி, பெண்களுக்கு ஒரு கலங்கரை விளக்கு என்று தான் சொல்ல வேண்டும்.

பழம் பெரும் பெருமை கொண்ட இந்த கல்லூரியை இடிப்பதற்கு சிலர் திட்டம் தீட்டினார்கள். அதிமுக ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். இதனால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டோம். ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்காக சிறை சென்றது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்று முதலமைச்சர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.