#Goa | மீன்பிடி படகுடன் மோதிய இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பல்… 2 மீனவர்கள் மாயம்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலுடன் மீன்பிடி படகு மோதி விபத்துக்குள்ளானதில் 2 மீனவர்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவா கடற்கரையில் இருந்து சுமார் 70 நாட்டிக்கல் மைல்கள் தொலைவில் கடலில் மீன்படி…

இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலுடன் மீன்பிடி படகு மோதி விபத்துக்குள்ளானதில் 2 மீனவர்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவா கடற்கரையில் இருந்து சுமார் 70 நாட்டிக்கல் மைல்கள் தொலைவில் கடலில் மீன்படி படகு மூலம் 13 மீனவர்கள் நேற்று (நவ.21) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மீனவர்களின் மீன்பிடி படகு இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மீன்பிடி படகு சேதமடைந்து நீரில் மூழ்கியது. உடனடியாக கடற்படையினர் 6 கப்பல்கள் மற்றும் ஏர்கிராப்ட் உதவியுடன் கடலில் மூழ்கிய மீனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள் : #Sorgavaasal டிரெய்லர் எப்போது? வெளியான அப்டேட்!

இதுவரை 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் மாயமான இருவரை தேடும் பணியில் இந்திய கடற்படை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (எம்ஆர்சிசி) மூலம் தேடுதல் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடலோர காவல்படை அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.