இந்தியா

“மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை அவகாசம்” – விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளதாக டெல்லி எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் 2 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில், சக்கா ஜாம் என்ற பெயரில், நேற்று விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் சங்க நிர்வாகி ராகேஷ் திகைத், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு, அக்டோபர் 2-ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளதாக தெரிவித்தார். அக்டோபர் 2ம் தேதிக்கு பின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அனைத்து விவசாயிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பிளாட்பாரத்தில் வசிக்கும் முன்னாள் முதலமைச்சரின் மைத்துனி

Ezhilarasan

பாஜக எம்.பி. ராம் சுவரூப் தூக்கிட்டு தற்கொலை!

Gayathri Venkatesan

’அதை பார்த்ததுமே மனசை தொட்டுடுச்சி’ நெதர்லாந்து பறந்த தெரு நாய்!

Gayathri Venkatesan

Leave a Reply