பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குக- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் பகுதிநேர…

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கபட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. 11 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அவர்களுக்கு பொங்கல் போனஸ் மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது.

https://twitter.com/draramadoss/status/1614148599260274689?s=08

பகுதி நேர ஆசிரியர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவர்களின் குடும்பச் செலவுகளுக்கே போதாது எனும் நிலையில், பொங்கல் திருநாளைக் கொண்டாட அவர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது தான் நியாயமாகும்.

பகுதி நேர ஆசிரியர்களின் நிலைமையை உணர்ந்து அவர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பணி நிலைப்பு செய்யவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.