பல இடங்களில் நாம் இங்கு வாகனங்களை நிறுத்தாதீர்கள், போஸ்டர் ஒட்டாதீர்கள், எச்சில் துப்பாதீர்கள் போன்ற அறிவிப்புகள் எழுதியிருப்பதை பார்த்திருப்போம். ஆனால், மும்பையின் போரிவலி பகுதியில் உள்ள சத்யம் சிவம் சுந்தரம் என்ற கட்டடத்துக்கு வெளியே இங்கு முத்தமிட தடைசெய்யப்பட்ட பகுதி என சாலையில் எழுதப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்திற்கு வெளியே மாலை நேரத்தில் ஜோடிகள் வந்து பேசிக்கொண்டிருப்பதும் வெளிச்சம் சற்று குறைந்ததும் அவர்கள் முத்தமிட்டுக்கொள்வது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இது குடியுருப்பு வாசிகளுக்கு முகம் சுளிக்க வைக்கும் செயலாக மாறியுள்ளது. இதனால், இது முத்தமிடும் பகுதியல்ல என அவர்கள் சாலையில் எழுதி வைத்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தபோது, கொரோனா ஊரடங்கிற்கு பின் இங்கு ஜோடிகள் முத்தமிடும் செயல் அதிகரித்துள்ளது. சாலையில் முத்தமிடும் பகுதி இல்லை என எழுதிய பின் ஜோடிகளின் வருகை குறைந்துள்ளது. இங்கு வருபவர்களும் செல்பி மட்டும் எடுத்து விட்டு செல்கின்றனர் என தெரிவித்தனர்.
இதுகுறித்து குடியிருப்பு சங்கத் தலைவர் மற்றும் வழக்கறிஞர் வினய் அனுஷ்கர் பேசுகையில், “உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முத்தமிடுவது குற்றமில்லை. நாங்கள் ஜோடிகளுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால், எங்களது வீட்டின் அருகே இதுபோன்ற அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுபவர்களை தான் வெறுக்கிறோம். எங்களது கட்டடத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உள்ளனர். நாங்கள் போலீசாரை அழைத்தோம் அவர்கள் வரவில்லை. கவுன்சிலரிடம் புகாரளித்தோம் அதனால் எந்த பயனும் இல்லை. இதனால், சாலையில் காதலர்கள் முத்தமிட அனுமதில்லை என எழுதினோம். அங்கு வரும் தம்பதியினரிடமும் தனிப்பட்ட முறையில் இதுதொடர்பாக கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்தார்.