சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறையில் உள்ள ஜான் என்பவரிடம் மருத்துவக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் ஏற்கனவே 4 பேர் சிறையில்
அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விசாரணை நடைபெறுகிறது. முதற்கட்டமாக ஈரோடு கிளைச் சிறையில் உள்ள ஆதார் கார்டு திருத்தம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஜான் என்பவரிடம் மருத்துவக் குழு விசாரித்து வருகிறது.
ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை
விற்றது தொடர்பாக சிறுமியின் தாயார் சுமையா, தாயாரின் இரண்டாவது கணவர் சையத் அலி , புரோக்கர் மாலதி மற்றும் ஆதார் கார்டு திருத்தம் செய்து கொடுத்த ஜான்
உள்ளிட்ட 4 பேரை ஈரோடு தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர். கருமுட்டை விற்பனை விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள், கருமுட்டை பெற்றதாக ஈரோடு , சேலம், பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று மருத்துவக் குழுவினர் விசுவநாதன் தலைமையில் கிளைச் சிறையில் உள்ள ஜானிடம் சுமார் அரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.








