பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு அபாரமானது: ஜெர்மனி தூதர்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பு அபாரமானது என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் லின்ட்னெர் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பதவியில் இருந்து வால்டர் லின்ட்னெர் ஓய்வு பெற உள்ளதை முன்னிட்டு…

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பு அபாரமானது என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் லின்ட்னெர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பதவியில் இருந்து வால்டர் லின்ட்னெர் ஓய்வு பெற உள்ளதை முன்னிட்டு டெல்லியில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, இன்னும் 4 வாரங்களில் தான் ஓய்வுபெற இருப்பதாகவும், இந்தியாவை விட்டு ஜெர்மனிக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

பண்முகத்தன்மை கொண்ட நாடாகவும், தனித்தன்மை மிக்க நாடாகவும் இந்தியா திகழ்வதாகப் புகழ்ந்த அவர், வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பெருமை என குறிப்பிட்டார்.

முதன்முதலாக 1976ம் ஆண்டு தான் இந்தியாவுக்கு வந்ததாகத் தெரிவித்த ஜெர்மனி தூதர், தற்போது இந்தியா அடைந்திருக்கும் முன்னேற்றம் அதிசயிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பு அபாரமானது என தெரிவித்துள்ள இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் லின்ட்னெர், ஜெர்மனியின் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் மோடியின் செயல்பாட்டை அடிக்கடி புகழ்வார் என கூறினார். மேலும், அவ்வளவு பெரிய நாட்டை மோடி எவ்வாறு ஆட்சி செய்கிறார் என ஆச்சரியத்துடன் அவர் தன்னிடம் கேட்பார் என்றும் வால்டர் லின்ட்னெர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.