வெளியானது கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ!

‘டாடா’ படத்திற்கு பின் கவின் நடிப்பில் உருவாகி வரும்  ‘ஸ்டார்’ திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. ‘டாடா’ விற்கு பின் கவின் நடிப்பில் உருவாகி வரும்  ‘ஸ்டார்’. இப்படத்தை இயக்குநர் இளன் இயக்குகிறார்.…

‘டாடா’ படத்திற்கு பின் கவின் நடிப்பில் உருவாகி வரும்  ‘ஸ்டார்’ திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

‘டாடா’ விற்கு பின் கவின் நடிப்பில் உருவாகி வரும்  ‘ஸ்டார்’. இப்படத்தை இயக்குநர் இளன் இயக்குகிறார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக அதிதி எஸ். போஹன்ஹர் நடித்து வருகிறார். இந்நிலையில், படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் கவின் பல வேடங்களில் வருவதுபோல் காட்டப்பட்டுள்ளது. படத்தில் கவின் கதாநாயகனாகும் கனவில் இருக்கும் கதாபாத்திரமாக காட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர். பிக்பாஸிற்கு பின் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றியடைந்து வருகின்றன. டாடா படத்திற்கும் பின் மிகவும் பிரபலமடைந்தார். இதன்மூலம் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக கவின் உள்ளார். மேலும் ஒரே நேரத்தில் மூன்று படங்களை கவின் கைவசம் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.