#Bloodybeggar படத்தின் முதல் பாடல் எப்போது? – லேட்டஸ்ட் அப்டேட்!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளடி பெக்கர்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட்,…

Gavin's Bloody Becker: First Song Announcement

கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளடி பெக்கர்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கினார். சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதாக அறிவித்தார். இவரின் முதல் திரைப்படத்தில் நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ‘பிளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதையும் படியுங்கள் : தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் : மகளிர் #Highjump -ல் தங்கம் வென்றார் இந்தியா வீராங்கனை பூஜா!

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், ‘பிளடி பெக்கர்’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘பிளடி பெக்கர்’ படத்தின் முதல் பாடலான நானே யார் பாடல் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.