கவினின் #BloddyBegger திரைப்படம் – டீசர் வெளியீடு!

நெல்சன் இயக்கத்தில் கவின் நடிக்கும் பிளடி பெக்கர் திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர்…

Gavin's #BloddyBegger Movie - Teaser Released!

நெல்சன் இயக்கத்தில் கவின் நடிக்கும் பிளடி பெக்கர் திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கினார். சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதாக அறிவித்தார். இவரின் முதல் திரைப்படத்தில் நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ‘பிளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், ‘பிளடி பெக்கர்’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில், ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. யாசகராக நடித்துள்ள கவினின் தோற்றம் கவனம் ஈர்க்கிறது. சிக்னலில் யாசகம் கேட்பவராக தரையில் அமர்ந்து ஆட்டோகாரரிடம் காசு கேட்கிறார் கவின். அவர் சவாரி இல்லை என்று சொல்ல “எனக்கு மட்டும் கால் இருந்திருந்தா உன்ன மாதிரி நானும் ஆட்டோ ஓட்டியிருப்பேன்” என அப்பாவி முகத்துடன் கூறி நகர்கிறார். வெறும் ஓர் அறிவிப்பாக இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.