விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜபாளையத்தில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஆன்மீக நற்பணி மன்றம் சார்பில் ராஜபாளையத்தில் 6 விதமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரே ரதத்தில் முன்பக்கம் சோபகிருது கணபதி, பின்பக்கம் உச்சிஷ்ட கணபதி என இரண்டு விதமாக பிரம்மாண்டமான சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பளு தூக்கும் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஹீரோ பைக்கில் வல்லப கணபதியும், புல்லட் பைக்கில் ஏகாந்த கணபதியும் நகர் வலம் வருவது போன்றும் விதவிதமாக சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்று சூழலை பாதிக்காத வண்ணம் மரவல்லிக் கிழங்கு மாவு, தேங்காய் நார் உள்ளிட்ட மூலப் பொருட்கள் கொண்டு இவை தயாரிக்கப்பட்டுள்ளன.







