பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ஆங்கிலத்தில் வெளியானது காந்தாரா!

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் ‘காந்தாரா’ திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.  கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி…

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் ‘காந்தாரா’ திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. 

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளியான இத்திரைப்படம், விமர்சனரீதியாக மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, நல்ல வசூலையும் குவித்ததால், படத்தை மற்ற மொழிகளிலும் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்தது. ரூ.16 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்தது.

அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியானது. அதன் பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகி எண்ணற்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, அதனை தொடர்ந்து இப்பொழுது ஆங்கில மொழியிலும் ஓடிடி தளத்தில் வெளியானது என காந்தாரா இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காந்தாரா திரைப்படத்தை 2023-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகப் படத்தைத் தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் விஜய் கிர்கந்தூர் தெரிவித்திருந்தார். 100 நாள் கடந்த காந்தாரா படத்தின் கொண்டாட்ட நிகழ்வில் படக்குழு படம் குறித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது ரிஷப் கூறுகையில், “கந்தாராவுக்கு அபரிமிதமான அன்பையும் ஆதரவையும் காட்டிய பார்வையாளர்களால் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எல்லாம் வல்ல தெய்வத்தின் ஆசியுடன் இப்படம் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவிக்க விரும்புகிறேன்” என்றார்.

மேலும், “நீங்கள் பார்த்தது உண்மையில் காந்தாரா படத்தின் பாகம் 2. காந்தாரா பாகம் 1 அடுத்த ஆண்டு வரும். காந்தாரா படத்தின் கதைக்கு வரலாற்றில் ஆழம் அதிகமாக இருப்பதால், காந்தாராவின் படப்பிடிப்பிலிருந்தபோது என் மனதில் இந்த யோசனை தோன்றியது. இன்னும் கதைக்கான பணி நடந்து கொண்டிருப்பதால், படத்தைப் பற்றிய விவரங்களைப் பின்னர் வெளியிடுகிறேன்” என்றார்.

https://twitter.com/shetty_rishab/status/1624406860366516225

ரிஷப் ஷெட்டி தற்போது காந்தாரா 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் பாகத்தைப் போலல்லாமல், காந்தாரா பாகம் இரண்டு சுமார் 3000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து காந்தாரா திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ஆங்கில மொழியில் வெளியானது என இயக்குநர் ரிஷப் ஷெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து “தெய்வீகத்தால் மயங்கவும்” என கூறியுள்ளார். ஆங்கில மொழியில் வெளியாவதால் காந்தாரா திரைப்படத்தின் தெய்வீக மணம் உலகளவில் பரவட்டும் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.