ஜி 20 மாநாட்டின் இரவு விருந்து நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் தலைவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரவேற்றார்.
ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மேலும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும் அதற்கு பதிலாக அந்த நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ரஷ்யா , ஜி20 மாநாட்டுக்கான கூட்டறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து உறுப்பு நாடுகள் கூட்டறிக்கை வெளியிடப்படவுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில், கூட்டறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாட்டின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் வருகைதரத் தொடங்கினர்.
டெல்லி பாரத் மண்டபத்தின் பிரமாண்டமான அறையில் நடைபெறும் இந்த சிறப்பு இரவு விருந்தில் முன்னாள் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்பட 170 முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். நமது நாட்டின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையிலான சைவ, அசைவ உணவுகள் விருந்தில் இடம்பெற்றுள்ளன.
விருந்தின்போது 50 க்கும் மேற்பட்ட இசைகலைஞர்கள் பங்கேற்கும் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் இரவு விருந்துக்கு ஜி-20 அமைப்பு நாடுகளின் தலைவர்கள் உள்பட ஏராளமான தலைவர்கள் வருகைத்தரத் தொடங்கினர். அவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரவேற்றார்.