புதுச்சேரியில், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப் பெற கோரி
சவப்பாடை ஊர்வலம் நடத்திய , 100க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினரை
போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை
மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், மின்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை ஊழியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற கோரி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு சமூக மற்றும் நுகர்வோர் அமைப்புகள் சார்பில், காமராஜர் சிலையின் முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டத்தை நடத்தினர்.
தொடர்ந்து , அண்ணா சிலை அருகில் இருந்து சவப்பாடையில் ஒருவரை படுக்க
வைத்து தூக்கி சென்று ஒப்பாரி வைத்து, அண்ணா சாலை வழியாக காமராஜர்
சிலைக்கு வந்தனர்.
இந்நிலையில், அங்கு ஒப்பாரி வைத்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய, 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும், சவப்பாடையை பறிமுதல் செய்தனர்.
—-கு.பாலமுருகன்







