25-ம் தேதி முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழக்க ஏற்பாடு!

முதலமைச்சரின் உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து காலை தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஏழை குழந்தைகள் பயன் பெறும் வகையில் காலை…

முதலமைச்சரின் உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து காலை தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஏழை குழந்தைகள் பயன் பெறும் வகையில் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் துவங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயின்று வரும் 1 லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த திட்டம் குறித்து தமிழக அரசு தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, 1,978 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டால், மொத்தம் உள்ள 31,008 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 15,75,900 மாணவர்கள் பயனடைவார்கள். ரூ. 404 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் ரூ.12.71 செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சரின் உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து காலை தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.