இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு பயணச்சீட்டு

அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு இன்று முதல் பேருந்துகளில் பயணச்சீட்டுகள் வழங்கும் முறை தொடங்கியது. தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முன்னதாக…

அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு இன்று
முதல் பேருந்துகளில் பயணச்சீட்டுகள் வழங்கும் முறை தொடங்கியது.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி
பெற்று ஆட்சி அமைத்தது. முன்னதாக தேர்தல் வாக்குறுதியில் மாநகர
பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி முதலமைச்சராக பதவியேற்றதும், பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அரசாணையை வெளியிட்டார்.

அதன்பின் இலவச பயணம் மேற்கொள்பவர்களுக்கென பிரத்யேகமாக பயணச்சீட்டு அடிக்கும் பணி நடைபெற்றது. இலவச பயணத்தை மேற்கொண்டு வந்த மகளிருக்கு, இன்று
முதல் பேருந்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படும் என போக்குவரத்துறை
அறிவித்தது. எந்தெந்த வழித்தடத்தில் எத்தனை மகளிர் இலவச பயணம்
மேற்கொண்டனர் என்பதை கண்டறிய பயணச்சீட்டு வழங்கப்படுவதாக கூறியது. இந்நிலையில், இந்த நடைமுறை காலை முதல் அமலுக்கு வந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.