35.7 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

அமேசானில் வெளியாகிறது சசிகுமாரின் ’உடன்பிறப்பே’, சூர்யாவின் ’ஜெய் பீம்’

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள சசிகுமாரின் ’உடன்பிறப்பே’, சூர்யாவின் ’ஜெய்பீம்’ உட்பட 4 படங்கள் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கின்றன.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘ஜெய் பீம்’, இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா நடித்துள்ள ‘உடன்பிறப்பே’, சாரோ சண்முகம் இயக்கத்தில் அருண் விஜய், அர்ணவ் விஜய் நடித்துள்ள ‘ஓ மை டாக்’, அரிசில் மூர்த்தி இயக்கத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன் நடித்துள்ள ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தப் படங்களை, இப்போது அமேசான் பிரைமில் நேரடியாக வெளியிட 2டி என்டர்டெயின் மென்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

’ஜெய் பீம்’ படம் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. கிரைம் திரில்லர் திரைப்படமான இது, பழங்குடியின தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்விய லை சொல்லும் படமாக அமைந்துள்ளது. எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.

இரா சரவணன் இயக்கிய ‘உடன்பிறப்பே’ படம், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் உடன்பிறப்புகள் வைரவன் மற்றும் மாதங்கி ஆகியோருக்கு இடையேயான நிபந்தனையற்ற அன்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இதில் சசிகுமாரும், ஜோதிகாவும் உடன் பிறப்புகளாக நடித்துள்ளனர். இந்த படம் அமேசானில் அக்டோபர் மாதம் வெளியாகிறது.

சரோவ் சண்முகம் இயக்கியுள்ள ’ஓ மை டாக்’, குழந்தைகளின் உலகம், அவர்களின் ஆசை,
துணிச்சல், தைரியம், நட்பு, நிபந்தனையற்ற அன்பு மற்றும் விஸ்வாசம் குறித்து பேசும் திரைப்படம். இது டிசம்பரில் வெளியாகிறது. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் செப்டம்பரில் அமேசானில் வெளியாகிறது. இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ள இது நகைச்சுவை திரைப்படம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading