முக்கியச் செய்திகள் தமிழகம்

லஞ்ச ஒழிப்புத்துறையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்

போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.

அதிமுக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர், கடந்த ஜூலை 22 ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். இதில் வருமானத்திற்கு அதிகமாக விஜயபாஸ்கர் சொத்து சேர்த்தாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்த லஞ்சஒழிப்புத் துறை, கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி, லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

ஆனால், உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டி நேரில் ஆஜராக முடியாது என எம்.ஆர். விஜயபாஸ்கர் தரப்பில் விலக்கு கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது . இதையடுத்து விஜயபாஸ்கருக்கு அக்டோபர் 25-ஆம் தேதி நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவர் சகோதரர் சேகர் நேரில் ஆஜராயினர். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை; ராம்நாத் கோவிந்த்

Saravana Kumar

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!

Halley karthi

சக போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்!

Jeba Arul Robinson