அமமுக தலைவராக முன்னாள் எம்.பி. கோபால் நியமனம் – சசிகலாவுக்காக நீண்ட காலமாக பதவி காலியாக இருந்த நிலையில் தேர்வு…

அமமுக தலைவராக முன்னாள் எம்.பி.கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சசிகலாவுக்காக நீண்ட காலமாக பதவி காலியாக இருந்த நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில், அம்மா மக்கள் முன்னேற்றக்…

அமமுக தலைவராக முன்னாள் எம்.பி.கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சசிகலாவுக்காக நீண்ட காலமாக பதவி காலியாக இருந்த நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. அமமுக துணைத் தலைவர் அன்பழகன் தலைமையிலும் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையிலும் நடைபெற்ற கூட்டத்தில் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். பொதுக்குழுவில், பொதுச் செயலாளர், தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இன்று மீண்டும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டிடிவி தினகரனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. அதில், அமமுகவை தமிழக மக்களுக்கான இயக்கமாக நடத்தும் டிடிவிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்கு இன்று பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமமுக தோற்றுவித்த பிறகு முதல் தலைவராக முன்னாள் எம்.பி. கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் முதல் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலும், துணைத்தலைவர் அன்பழகனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதியதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று முதல் 4 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்கள்.

அமமுகவின் 6வது ஆண்டு பொதுக்குழு தீர்மானங்கள்;

அமமுகவின் 6வது ஆண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்துவது, குக்கர் சின்னத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பது , காவிரியில் புதிய அணை கட்டும் திட்டத்துக்கு கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, மேலும் கர்நாடக மாநிலத்துக்கு சென்றும் காவிரி பிரச்சனை குறித்து முதலமைச்சர் பேசாமல் திரும்பி வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.