ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷின்சோ அபே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும் ஜப்பான் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சந்தேக…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷின்சோ அபே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும் ஜப்பான் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக சந்தேக நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ஜப்பான ஊடகங்களில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, நாரா பகுதியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதை சற்றும் எதிர்பாராத ஷின்சோ அபே, பேசிக் கொண்டிருந்தபோதே ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஷின்ஷோ அபே நீண்ட காலம் ஜப்பான் பிரதமராகப் பதவி வகித்து வந்தவர் ஆவார். உடல் நலக் குறைவை காரணம் காட்டி கடந்த 2020 ம் ஆண்டு பதிவிலியிருந்து விலகும் முடிவை அவர் அறிவித்தார். இந்திய அரசுடன் அவர் அதிக நெருக்கத்தை காட்டி வந்தார். 2006, 2014, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்கு அவர் சுற்றுப் பயணமாக வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.