டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு செப். 12 வரை இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு!

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு, மருத்துவ காரணங்களுக்காக செப்டம்பர் 12-ம் தேதி வரை இடைக்கால ஜாமீனை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசில் அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் மீது…

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு, மருத்துவ காரணங்களுக்காக செப்டம்பர் 12-ம் தேதி வரை இடைக்கால ஜாமீனை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசில் அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் மீது பணமோசடி வழக்கு பதிவானது. இதனால், கடந்த மே மாதம் 30-ம் தேதி அமலாக்க இயக்குநரகம் அவரை கைது செய்தது. தொடர்ந்து அவர் வகித்து வந்த இலாகாக்கள், சுகாதாரம், உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்டவை துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதற்கிடையே சத்யேந்தர் ஜெயின் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. அண்மையில் திடீரென சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறையில் குளியலறைக்கு சென்றபோது சத்யேந்தர் ஜெயின் திடீரென வழுக்கி விழுந்து காயமடைந்ததாகவும், இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், அவரது உடல் நிலை காரணமாக ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இடைக்கால ஜாமீன் முடிவடைந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி பி.கே.மிஸ்ரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது உடல்நிலை காரணமாக சத்யேந்தர் ஜெயினின் இடைக்கால ஜாமீனை செப்டம்பர் 12-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.